அடல் சுரங்கப்பாதை தொடர்ந்து, மற்றொரு சோஜிலா சுரங்கப்பாதை பணி தொடங்கியது.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சமீபத்தில் அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மற்றொரு சோஜிலா சுரங்கப்பாதை கட்டுமானத்தை இன்று முதல் மத்திய அரசு தொடங்கியது. இந்த சோஜிலா சுரங்கப்பாதையை மத்திய போக்குவரத்து அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
சோஜிலா சுரங்கம் ஆசியாவின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை என்று கூறப்படுகிறது. சோஜிலா சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம், ஸ்ரீநகர், டிராஸ், கார்கில் மற்றும் லே இடையே அனைத்து பருவங்களுக்கும் சாலை திறக்கப்படும். இந்த சுரங்கப்பாதையால் லடாக் முதல் காஷ்மீர் வரையிலான பயண நேரம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் குறையும்.
சுரங்கப்பாதை பணிகள் இரண்டு பிரிவுகளாக முடிக்கப்படும். சோஜிலா சுரங்கப்பாதை சுமார் 33 கிலோமீட்டர் நீளம் கொண்டது. முதல் பிரிவில் 18.50 கி.மீட்டரிலும், இரண்டாவது பிரிவில், 14.15 கி.மீட்டரிலும் கட்டப்படும். 9.5 மீட்டர் அகலமும், 7.57 மீட்டர் உயரமும் கொண்டு இரண்டு சாலைவழி சோஜிலா பாஸ் சுரங்கப்பாதை கட்டப்படும்.
சுரங்கப்பாதை கட்டுமானத்திற்காக 4,509 கோடி ரூபாய் செலவிடப்படும். ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவு செய்வதற்கான முயற்சியில் MEIL நிறுவனம் 4,509 ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மற்ற நிறுவனங்கள் இதை விட அதிக கட்டணம் கேட்ட நிலையில் இந்த திட்டத்தை முடிக்க MEIL க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலான திட்டத்தை 72 மாதங்களில் முடிக்க முடியும் என்று MEIL இயக்குனர் சி.எச்.சுப்பையா தெரிவித்தார்.
சோஜிலா சுரங்கப்பாதை அமைப்பதற்கான முதல் குண்டுவெடிப்பு இன்று காண்டர்பால் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)