டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தொடர்ந்து, மேலும் 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லடாக், கல்வான் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாகவும், சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது.
அந்தவகையில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-ஏ பிரிவின் கீழ், மத்திய அரசு கடந்த ஜூன் மாதம், 29-ம் தேதி தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, டிக்டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, அந்த செயலிகளின் தொடர்புடைய 47 குளோன் செயலிகளை தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தடைசெய்யப்பட்ட குளோன் செயலிகளில் டிக்டோக் லைட், ஹெலோ லைட், ஷேர் லைட், பிகோ லைவ் லைட் மற்றும் விஎஃப்ஒ லைட் ஆகியவை அடங்கும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…