கொரோனாவை ஒழிக்க இந்த 5 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் – உலக சுகாதார அமைப்பு.!
உலக முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிருக்கும் கொரோனா வைரசால், இதுவரை உலகளவில் கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,702 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,020 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,17,446 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோஸ் அதனோம் கேப்ரியேஸஸ், மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்வது நோய் பரவலை கட்டுப்படுத்தி சுகாதாரத் துறையின் மீதான நெருக்கடியை குறைக்கும். ஆனால் கொரோனா தொற்றை முழுவதும் அழித்துவிட முடியாது என்றும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இந்த 5 முக்கிய வழிமுறைகளை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனாவை பரவலை முழுவதும் அழிக்க 5 வழிமுறைகள் :
- சுகாதாரத் துறையை விரிவுபடுத்தி, சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
- ஒவ்வொரு சமூகத்திலும் நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறியும் அமைப்பை உருவாக்க வேண்டும்.
- கொரோனா பரிசோதிக்கும் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் வசதியை உருவாக்க வேண்டும்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து, வேற யாருக்கு தொற்று பரவியிருக்கக் கூடும் என்பதை ஆய்வு செய்து சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.