பிரதமர் மோடிக்கு ஆல்பத்தை அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி !
குஜராத் மாநிலத்தில் புகழ் பெற்ற நாட்டுப்புற பாடகி கீதா ராபரி.இவர் பாடிய அனைத்து ஆல்பம் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.இந்நிலையில் பாடகி கீதா ராபரி பாடிய ஆல்பத்தை பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார்.
கீதா ராபரி இன்று மோடியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அப்போது பேசிய கீதா ராபரி தன் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருத்தினராக மோடி கலந்து கொண்டதாகவும் அந்த விழாவில் தான் பாடிய பாடலை பாராட்டி ரூ. 250 கொடுத்து கவுரவித்ததாகவும் கூறினார்.
இந்நிலையில் ட்விட்டரில் மோடி ” கீதா ராபரி நான் ஊக்குவித்ததது தனக்கு நினைவில் இருப்பதாகவும் , நீண்ட நாள்கள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
Geeta Rabari is a young and prolific singer from Gujarat, whose works have enthralled Gujaratis globally! I remember encouraging her to pursue singing when she was a child and today, I had the opportunity to interact with her. It was wonderful to know more about her experiences. https://t.co/WltG1oDDyl
— Narendra Modi (@narendramodi) July 8, 2019
குஜராத் மொழியில் கீதா ராபரி பாடிய ரோனோ ஷெர்மா என தொடங்கும் ஆல்பத்தை 25 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.