இயற்றலும் எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்
இயற்றலும் எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி பட்ஜெட்டில் வரிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
திருக்குறளின் பொருள் :
“பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு “என்பது பொருளாகும்.