நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கிய நிலையில் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.
2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.பின்னர் பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா நிகழ்வு டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார்.அல்வா வழங்கிய நிலையில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிப்புப்பணி தொடங்கியது.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார் என்று பேசினார்.இதையடுத்து நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது.பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…