#Budget2021 : விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் e-Nam திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.