#Breaking : 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்
2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் நடைபெற்றது.பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள்.இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது.
மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து ,பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.