42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியுள்ளது.
2019-20ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,65000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ. 95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருந்தார். இதனை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள நடப்பு ஆண்டில் மட்டும் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதலாவதாக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.97,000 கோடி கடன் பெற்றுக் கொள்ளலாம். நியாயமான வட்டியுடன் இந்த கடன் தொகையை ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசுகள் கடன் பெறும் வரம்பை 0.5% உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என 2வது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், எதாவது ஒரு வாய்ப்பை தேர்தெடுத்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இழப்பீடு தொகையை ஈடுகட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க போவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதனை மாநிலங்கள் இதனை ஏற்கவில்லை.
இந்நிலையில் தான் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலமாக தொடங்கியுள்ளது. தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.12,250 கோடி உடனடியாக விடுக்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஏற்கனவே பிரமருக்கு
கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு இருக்க இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் நிலுவைத் தொகை குறித்து தமிழகம் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…