உத்தராகண்டில் வெள்ளப்பெருக்கு – பிரதமர் தலைமையில் ஆலோசனை.!
உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா மற்றும் மாநில எம்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உத்தராகண்ட் அரசு சமோலியில் வெள்ள மீட்பு பணிகளுக்காக ஏற்கனவே ரூ.20 கோடியை விடுவித்திருந்தது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், இதுவரை 18 பேரை சடலமாகவும், 15 பேர் உயிருடனும் மீட்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.