நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவழிகின்றன. இதையடுத்து அணைகள் திறப்பால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 31 மீட்பு முகாம் அமைத்து மீட்பு.
அம்மாநிலத்தின் முக்கிய ஆறுகளான காவேரி, ஹேமாவதி, கபிலா, ஹாரங்கி போன்ற ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அவற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 40,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வடக்கு கர்நாடகா மற்றும் மத்திய கர்நாடகாவில் உள்ள பத்ரா, துங்கபத்ரால காடாபிரபா, மலபிரபா அல்மாட்டி அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. மேலும் உடுப்பி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தேசிய பேரிடர் குழு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், உடுப்பி நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதேபோல் அம்மாவட்டத்தில் ஸ்வர்ணா, சீதாநதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இஸ்லாமாபாத் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் 'சாம்பியன்ஸ் டிராபி' தொடர் நடைபெறவுள்ளது. கடந்த…
டெல்லி : தலைநகர் டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும்…
சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு, 31-ம் தேதி…
அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில்,…
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார்…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த…