வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுச்சேரி… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
வெள்ளபாதிப்பால் புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. புயலால் ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால், பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இன்று சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே, புதுச்சேரியில் புயலால் பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் பாதிப்புக்குள்ளாகும் என அஞ்சப்படுகிறது.