அதானி நிறுவனத்துடன் இணைந்த ஃபிளிப்கார்ட்;2500பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!
ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட்,அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர் சேவையை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன.
பிரபல ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதானி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.அதாவது,ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரத்தை வலுப்படுத்தவும்,வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை செய்யவும் அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்தது.
ஆகவே,மும்பை மற்றும் சென்னையில் அதானியின் லாஜிஸ்டிக் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் புதிய விற்பனை மையங்கள் அமைக்க ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது உள்ளது.இதனால் நேரடியாக 2500பேருக்கும்,மறைமுகமாக 1000பேருக்கும் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைப்பற்றி கூறுகையில்,”இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு வணிகங்கள் ஒன்றிணைந்து நமது நாட்டிற்கு தேவையான மிக முக்கியமான மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பை உருவாக்க உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி தெரிவித்துள்ளார்.