Flipkart Delivered a order after 6 years [file image]
மும்பை: கடந்த 2018 ம் ஆண்டு மும்பையில் வசித்து வரும் அஹ்சன் கராபி ஈ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் செருப்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அது அப்போது அவருக்கு டெலிவரி ஆகாமலே இருந்து உள்ளது.
இந்நிலையில், இன்று அந்த டெலிவரி உங்களுக்கு வந்துவிடும் என தினம் தோறும் அந்த ஆப்பில் காட்டி கொண்டே இருந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த ஆர்டர் சென்றடையவில்லை. மேலும், 6 வருடங்களுக்கு இன்று அவருக்கு அவர் ஆர்டர் செய்த செருப்பானது டெலிவரி ஆகியுள்ளது.
மேலும், அந்த ஆர்டரை அவர் கேஷ்-ஆன் டெலிவரியில் ஆர்டர் செய்ததால். அந்த ஆர்டரை பற்றி அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். மேலும், சமீபத்தில் இந்த ஆர்டர் என்ன காட்டுகிறது என ஆப் உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.
அப்போது, ‘உங்கள் ஆர்டர் இன்று வந்து விடும்’ என்று தான் காட்டியிருக்கிறது. இந்நிலையில், நேற்று அவருக்கு பிளிப்கார்ட்டில் இருந்து போன் கால் வந்துள்ளது. அதில் அவரது ஆர்டரில் ஆர்ட்டரில் என்ன பிரச்சனை என்று கேட்டறிகிறார்கள். அதற்கு இவரும் அந்த பிரச்சனையை குறித்து விவாதித்துள்ளார்.
அதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் இவருக்கு நடந்த தவறுக்காக மன்னிப்பு கூறி அவர் ஆர்டர் செய்த அந்த செருப்பினையும் அவருக்கு டெலிவரி செய்துள்ளனர்.
இந்த விசித்திரமான அனுபவத்தை அஹ்சன் கராபி அவரது X தளத்தில் பகிர்ந்திருந்தார். அதன்பின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்திருந்தார் அதில் மேல் கூறிய அனைத்தையும் அந்த பேட்டியில் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…