டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் இயக்கம்.!

டெல்லி விமான நிலையத்தில் அக்டோபர் 1 முதல் டி2 முனையத்தில் விமானங்கள் மீண்டும் தொடங்க உள்ளது.
டெல்லி விமான நிலையம் ஆறு மாதங்கள் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 1 முதல் டி 3 முனையத்திலிருந்து விமானங்களை மீண்டும் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயால் மார்ச் 23 முதல் டி 3 முனையத்திலிருந்து குறைந்த விமானங்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில், டி 2 முனையத்தில் ஒரு நாளைக்கு 96 விமானங்கள் இயக்கப்படவுள்ளது. அதில், 48 விமானம் போகிறது மற்றும் 48 வருகிறது. அந்த வகையில், அக்டோபர் இறுதிக்குள் படிப்படியாக 180 விமானமாக வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்களை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், வந்தே பாரத் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயங்கி வந்தது. மே 25 முதல் உள்நாட்டு விமானங்கள் 60 சதவீதத்திற்கு மேல் இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025