ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த விமான டிக்கெட் பணம் வாபஸ்.! – மத்திய அரசு அறிவிப்பு.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொது போக்குவரதான ரயில், விமானம், பேருந்து சேவைகள் முடக்கப்பட்டன. இதனால், ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு திருப்பி தர மத்திய அரசு ஏற்பாடு செய்ய்துவருகிறது.
அதன்படி, ரயில் போக்குவரத்து முன்பதிவுகள் திருப்பி தரப்படுமென மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது விமான போக்குவரத்திற்கும் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையை பயணிகளுக்கு எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பி தர வேண்டும் என மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரையில் முன்பதிவு செய்தவர்களுடைய கட்டண தொகையை திருப்பி தர விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பிடித்தம் ஏதுமின்றி டிக்கெட் பணம் திருப்பி தரப்படும் என்றும் அதற்காக விண்ணப்பித்த 3 வாரங்களுக்குள் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமான கட்டணமும் பயணிகளுக்கு திருப்பி தரப்படும் எனவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.