வான்பரப்பில் மும்பையில் ஏர் இந்தியா, விஸ்தாரா விமானங்கள் மோதவிருந்தது கண்டறியப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மும்பையில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் போபாலுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம் 27ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, டெல்லியில் இருந்து மும்பை வழியாகப் புனே செல்லும் விஸ்தாரா விமானமும் மும்பைக்கு வந்துள்ளது.
29ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விஸ்தாரா விமானம் படிப்படியாக உயரத்தைக் குறைத்து 27ஆயிரம் அடி உயரத்துக்கு வந்தபோது எதிரே ஏர் இந்தியா விமானமும் வந்துள்ளது. இரு விமானங்கள் ஒரேதடத்தில் வந்து மோதுவதைத் தவிர்க்கும் அமைப்புக்கு இது தெரிந்து இரு விமானங்களின் விமானிகளுக்கும் அபாய எச்சரிக்கை அனுப்பட்டது.
இதையடுத்து விமானிகள் விரைந்து செயல்பட்டு விமானங்கள் மோதுவதைத் தவிர்த்துவிட்டனர். இரு விமானங்களுக்கிடையே 100அடி உயரமும் 3கிலோமீட்டர் தொலைவும் இடைவெளி இருக்கும்போதே இது கண்டறியப்பட்டதால் ஒருசில நொடிகள் நேரத்தில் நிகழவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…