மும்பை வான்பரப்பில் விமானங்கள் மோத இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தவிர்ப்பு!

Default Image

வான்பரப்பில் மும்பையில்  ஏர் இந்தியா, விஸ்தாரா விமானங்கள் மோதவிருந்தது கண்டறியப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மும்பையில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலம் போபாலுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம் 27ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, டெல்லியில் இருந்து மும்பை வழியாகப் புனே செல்லும் விஸ்தாரா விமானமும் மும்பைக்கு வந்துள்ளது.

29ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விஸ்தாரா விமானம் படிப்படியாக உயரத்தைக் குறைத்து 27ஆயிரம் அடி உயரத்துக்கு வந்தபோது எதிரே ஏர் இந்தியா விமானமும் வந்துள்ளது. இரு விமானங்கள் ஒரேதடத்தில் வந்து மோதுவதைத் தவிர்க்கும் அமைப்புக்கு இது தெரிந்து இரு விமானங்களின் விமானிகளுக்கும் அபாய எச்சரிக்கை அனுப்பட்டது.

இதையடுத்து விமானிகள் விரைந்து செயல்பட்டு விமானங்கள் மோதுவதைத் தவிர்த்துவிட்டனர். இரு விமானங்களுக்கிடையே 100அடி உயரமும் 3கிலோமீட்டர் தொலைவும் இடைவெளி இருக்கும்போதே இது கண்டறியப்பட்டதால் ஒருசில நொடிகள் நேரத்தில் நிகழவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்