இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக தெளிவுடன் ஒரே நேர்த்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ(DS-EO) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்,என்இயு-சாட்(NeuSAR, SAR),ஸ்கூப் 1 உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் நாளை( ஜூன் 30 ஆம் தேதி) விண்ணில் செலுத்த உள்ளது.அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி53 விண்கலம் மாலை 6 மணிக்கு புறப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு,பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.இதனிடையே,DS-EO என்பது 365 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் என்றும்,NeuSAR ஆனது 155 கிலோ எடை கொண்டது என்றும்,இவை இரண்டும் சிங்கப்பூரை சேர்ந்தவை எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும்,மூன்றாவது செயற்கைக்கோள் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTU) 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…