[FILE IMAGE]
நாட்டின் 75வது குடியரசு தினம் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் கர்தவ்ய (கடமை) பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
இதன்பின் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மாநிலத்தின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்று, குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டின் 75வது குடியரசு தினமான இன்று இந்தியா – பாகிஸ்தான் எல்லையான அட்டாரி – வாகா பகுதியில் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இதில், இந்தியாவின் அட்டாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் எல்லையாக உள்ளன. இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக் கொடியை மாலை இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமானதாகும். அந்தவகையில், அட்டாரி – வாகா பகுதியில் இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு கொடியிறக்கம் நிகழ்வு நடைபெற்றது. அட்டாரி எல்லையில் இரு நாட்டு வீரர்களும் மிடுக்குடன் நடைபோட்டு கொடியிறக்கம் நிகழ்வில் பங்கேற்றனர்.
சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக நடைபெற்ற கொடியிறக்கம் நிகழ்வில் காலாட்படை வீரர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, இருநாட்டு கொடிகளும் ஒரே நேரத்தில் இறக்கப்பட்டு, மடிக்கப்பட்டு கைக்குலுக்கிய பின்னர் நிகழ்வு நிறைவு பெற்றது. அட்டாரி – வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…