Categories: இந்தியா

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து விலை நிர்ணயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம்.

மூக்கு வழியே (நாசி தடுப்பூசி) செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல் கொரோனா  தடுப்பூசி iNCOVACC தனியார் மருத்துவமனையில் ரூ.800, அரசு மருத்துவமனையில் ரூ.325 ஆக நாசி கொரோனா தடுப்பு மருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு முதற்கட்டமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட உள்ளது. மேலும் இந்த தடுப்பூசி CoWin இல் கிடைக்கும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும், இது ஜனவரி நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. ஊசி இல்லாத தடுப்பூசியாக, iNCOVACC இந்தியாவின் முதல் பூஸ்டர் டோஸ் ஆகும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

10 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

1 hour ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago