மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்து விலை நிர்ணயம்!
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம்.
மூக்கு வழியே (நாசி தடுப்பூசி) செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல் கொரோனா தடுப்பூசி iNCOVACC தனியார் மருத்துவமனையில் ரூ.800, அரசு மருத்துவமனையில் ரூ.325 ஆக நாசி கொரோனா தடுப்பு மருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு முதற்கட்டமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட உள்ளது. மேலும் இந்த தடுப்பூசி CoWin இல் கிடைக்கும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும், இது ஜனவரி நான்காவது வாரத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. ஊசி இல்லாத தடுப்பூசியாக, iNCOVACC இந்தியாவின் முதல் பூஸ்டர் டோஸ் ஆகும்.