ஏழைகளுக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவங்கி வைத்த ஐந்து ரூபாய் உணவு திட்டம்!
ஏழைகள் நல்வாழ்வு பெறுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று காணொளி வாயிலாக ஐந்து ரூபாய் உணவு திட்டத்தை துவங்கி வைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் விறுவிறுப்பான பிரச்சாரம் மற்றும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், இதில் ஒரு கட்டமாக ஏழைகளுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்க கூடிய திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தில் 5 ரூபாய்க்கு பருப்பு உணவுகள் மற்றும் முட்டையும் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு 15 ரூபாய் மானியமாக ஒரு உணவுக்கு செலுத்துகிறது. பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை சுய உதவிக்குழுவினர் சமையலறையை பராமரித்து உணவுகளை தயார் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இதற்கான சமையலறைகள் படிப்படியாக ஒவ்வொரு இடங்களிலும் அமைக்கப்படும் எனவும் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.