Women Gang rape in Agra UP [File Image]
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தகவல் அறிந்து சென்ற ஆக்ரா போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு பெண் உட்பட 4 ஆண்கள் என 5 பேரை கைது செய்தனர்.
சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு ஆக்ராவில் உள்ள காவல்நிலையத்திற்கு ஒருவர் போன் செய்து , ஆக்ராவில் உள்ள பணக்கார தங்கும் விடுதியில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
ரசாயன கிடங்கில் பற்றிய தீ… அடுக்குமாடி குடியிருப்பு வரை தீ பரவி 6 பேர் உயிரிழப்பு.!
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஆக்ரா காவல் துறையினர், அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை காட்டி மிரட்டி அந்த பெண்ணை கொடூர கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
அப்போது அந்த பெண்ணை உடல்ரீதியாக தாக்கி, மதுகுடிக்க வற்புறுத்தியும் அந்த கும்பல் சித்ரவதை செய்துள்ளாதாக தெரிகிறது. இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் , பெண்ணின் மருத்துவ அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஆக்ரா உதவி காவல் ஆணையர் அர்ச்சனா சிங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…