மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையில்,”பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்காக தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவுகளையும் அரசு ஏற்கும்” என்று சிஎம்ஓ ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,இதுபற்றி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில்,மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சுமார் 35 பேர் உயிர் இழந்துள்ளதாக தாக்கரே தெரிவித்ததோடு, மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் இருந்து பெய்த கனமழையால் ராய்காட், ரத்னகிரி, பால்கர், தானே, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தாக்கரே தெற்கு மும்பையில் உள்ள மந்திராலயாவில் (மாநில செயலகம்) உள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலைமையைப் பற்றி கேட்டறிந்தார்.
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…