மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை மாநகராட்சியானது,கொரொனோ விதிமுறைகளை மீறியதற்காக 5 வீட்டுவசதி சங்கங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரொனோ 2ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த மும்பையின் குடிமை அமைப்பு, ஏப்ரல் 5ம் தேதி புதிய விதிமுறைகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தது.
இந்த வழிகாட்டுதல்களின்படி,கொரொனோ கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் வீட்டுவசதி சங்கத்தின் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நவி மும்பை மாநகராட்சி (NMMC) எச்சரித்துள்ளது.அதாவது முதல் முறை மீறலுக்கு ரூ.10,000 விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறையாக அதே தவறை செய்யும் சங்கங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குடிமை அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும்,வீட்டுவசதி சங்கங்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டு மண்டல விதிமுறைகளை மீறினால், குடிமை அமைப்பு ஒவ்வொரு முறையும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடமிருந்து ரூ.50,000 வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளன.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் அபிஜித் பங்கர் தெரிவிக்கையில்,”அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க, கொரொனோ கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நுழைய தடை செய்ய வேண்டும்,இந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது மக்களின் பொறுப்பாகும்” என்று கூறினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…