ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி மருத்துவமனையில் ஐந்து கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் தினமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக் மறுக்கப்படுவதாலும், பலர் உயிரிழந்து வருகின்றனர்.
தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரூர்க்கி எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 5 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த நோயாளிகளில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்ததாகவும், மேலும் 4 பேர் ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் கலெக்டர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…