உ.பி கேங்ஸ்டர் சுட்டுக்கொலை.! 5 காவல்துறையினர் சஸ்பெண்ட்..!

Default Image

உத்திர பிரதேசத்தில் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த சனிக்கிழமையன்று, உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பியும், கேங்ஸ்டாருமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் ,  வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்னர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜுக்கு அழைத்து வரப்பட்டபோது, காவலர்கள் முன்னிலையிலேயே மர்ம நபர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டு ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை கொலை செய்தனர்.

சட்டம் ஒழுங்கு :

காவலர்கள் முன்னிலையில், பத்திரிக்கையாளர்கள் போல வந்து மர்ம நபர்கள் நடத்திய இரட்டை கொலை துப்பாக்கி சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்பகுதியின் சட்ட ஒழுங்கு பற்றிய பல்வேறு கேள்விகள் எழுந்தன. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 5 காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

5 காவலர்கள் சஸ்பெண்ட் :

அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கொலை செய்யப்பட்ட MLN மருத்துவக் கல்லூரி வளாகம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றிய ஐந்து காவல்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்