ஜிஎஸ்டி விவகாரம் – 5 மாநில முதலமைச்சர்கள் கடிதம்

மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம்,கேரளம் தெலுங்கானா,டெல்லி,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்றது.அப்போது, 2019-20 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,65000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ. 95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருந்தார். ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூ.65,000 கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதனை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள நடப்பு ஆண்டில் மட்டும் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.அதன்படி, முதலாவதாக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.97,000 கோடி கடன் பெற்றுக் கொள்ளலாம். நியாயமான வட்டியுடன் இந்த கடன் தொகையை ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசுகள் கடன் பெறும் வரம்பை 0.5% உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என 2வது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், எதாவது ஒரு வாய்ப்பை தேர்தெடுத்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இழப்பீடு தொகையை ஈடுகட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க போவதில்லை என்று தெரிவித்திருந்தார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான இரண்டு விருப்பங்களை மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சில் முன் வைத்திருந்தது .ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வாங்க மாநிலங்களுக்கு சிறப்பு சாளரம் வழங்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம்,கேரளம் தெலுங்கானா,டெல்லி,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் கடிதம் அனுப்பியுள்ளது.
பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர்பழனிசாமி கடிதம் :
பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலையில் சீரமைக்க தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை ரூ.12,250 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் நிதியமைச்சகம் முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் மாநிலங்களுக்குரிய பிற ஒட்டுமொத்த ஆதாரங்களைக் குறைப்பதாக அமைந்திருக்கிறது.எனவே, நிதியமைச்சகம் முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகள் குறித்து பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் :
“ஜிஎஸ்டி இழப்பீட்டு சுமையை மாநிலங்களுக்கு மாற்றும் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டாம் என்று நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கடிதம் :
கொரோனா பரவி வரும் இந்த சூழ்நிலையில், மத்திய அரசு உதவி செய்வதற்கு பதிலாக , மாநிலங்களின் சட்டபூர்வமான உரிமையை கோர மறுக்கிறது.மாநில அரசுகள் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்குவதற்கு மத்திய அரசு பரிந்துரைத்ததை தெலுங்கானா அரசு கடுமையாக எதிர்க்கிறது.எனவே மத்திய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமா் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் :
மாநிலங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு முறையாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரிசா்வ் வங்கியிடம் மத்திய அரசு கடன் பெற்று அதை மாநிலங்களுக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவிதித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சருக்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கடிதம் :
மத்திய அரசு கடன் பெற்றோ அல்லது வேறு வழிகளிலோ நிதியை ஏற்பாடு செய்து மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை தாமதமின்றி வழங்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025