பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவில் புணரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் புயல் மற்றும் சீற்றங்களை முன்பே அறிந்து மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
இந்த புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். மேலும் கடலோர கிராமங்களின் முழுமையான மேம்பாட்டுக்கு திட்டங்களை தீட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் அமைக்கவும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.