காங்கிரஸ் கட்சியில் கடும் நிதிப் பற்றாக்குறை..!
காங்கிரஸ் கட்சியில் கடும் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள அக்கட்சியின் அலுவலகங்களுக்கு தேவையான நிதியை, கட்சி தலைமை கடந்த ஐந்து மாதங்களாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
நிதியை திரட்டும் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறும், செலவீனங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசியுள்ள அக்கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா, கட்சியில் போதிய நிதி இல்லை என தெரிவித்துள்ளார். நிதி வசூலிக்கும் புதிய நடைமுறையால் போதிய நிதி வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.