கர்நாடகாவில் பதிவான முதல் ஜிகா வைரஸ்! 5 வயது சிறுமி பாதிப்பு.!
கர்நாடகாவில் முதல்முறையாக ஜிகா வைரஸால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள 5 வயது சிறுமி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்த புனே சோதனைக்கூடம் அதனை உறுதி செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து பயப்படத்தேவையில்லை என்றும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் சுதாகர் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் இதே போன்று ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியிருந்தது.
தற்போது கர்நாடகாவில் உறுதியாகியிருக்கும் இந்த ஜிகா வைரஸ், முதலில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா டெஸ்டுக்காக பரிசோதனை செய்யப்பட்டது, புனேவில் அனுப்பப்பட்ட 10% மாதிரிகளில் இது மாநிலத்தில் முதன்முறையாக ஜிகா வைரஸ் தொற்றை உறுதி செய்துள்ளது.