உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி காலமானார்..!

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான நீதிபதி பாத்திமா பீவி (96) காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். பாத்திமா பீவி ஏப்ரல் 30, 1927 அன்று கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்தார். இவர் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார்.

1950-ஆம் ஆண்டு  நவம்பர் 14 அன்று கொல்லம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நடந்த பார்கவுன்சில் தேர்வில் முதலிடம் பெற்று 1958 இல் கேரள துணை நீதித்துறை சேவைகளில் துணை முன்சிஃப் ஆக நியமிக்கப்பட்டார்.  பாத்திமா பீவி 1968ல் துணை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் அவர் 1972 இல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டாகவும், 1974 இல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும் ஆனார். பின்னர் 1984ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 1989ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார்.

இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பாத்திமா பீவி பெற்றார். 1997ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பாத்திமா பீவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்