மகாராஷ்டிராவில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு!
மகாராஷ்டிராவில் இன்று முதல் திரையரங்குகள்,யோகா நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்படவுள்ளது .
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.செவ்வாய் நிலவரப்படி, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,92,693ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள்,நாடக அரங்குகள், நீச்சல் குளங்கள்,யோகா நிறுவனங்கள்,மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.50% இருக்கை வசதிகளுடன் திரையரங்குகள், நாடக அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் செயல்பட வேண்டும் என்றும், திரையரங்குகளின் உள்ளே சாப்பாட்டு பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இரண்டாவது அலை நோய்த்தொற்றுக்கு சாத்தியமில்லை என்றும்,அதுபோன்ற நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகவும் மகாராஷ்டிரா மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் டோப் கூறியுள்ளார்.மேலும் வழிப்பாட்டு தலங்களை திறப்பது தொடர்பான முடிவை தகுந்த நேரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே எடுப்பார் என்றும் கூறினார்.