முதலில் நாடுதான் முக்கியம் , அடுத்ததுதான் கட்சி-பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிக்கை
பாஜகவின் நிறுவன நாளையொட்டி அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், பாஜக தன்னுடைய நிறுவன தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 6-ஆம் தேதி கொண்டாடுகிறது. 1991ம் ஆண்டு முதல் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் 6 முறை எம்.பியாக தேர்வு செய்த மக்களுக்கு என்னுடைய நன்றிகள் தெரிவிக்க விரும்புகிறேன்.இன்னும் அவர்களது அன்பும் ஆதரவும் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நான் 14 வயதில் சேர்ந்தது முதல் தாய்நாட்டிற்காக சேவை செய்வதே என்னுடைய லட்சியமாகவும், நோக்கமாகவும் இருந்தது.அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட சிறந்த தலைவர்களுடன் நெருக்கமாக வேலை செய்துள்ளேன்.முதலில் நாடுதான் முக்கியம் , அடுத்ததுதான் கட்சி,இறுதியாகத்தான் தனிப்பட்ட வாழ்க்கை’ என்பது என்னுடைய கொள்கை ஆகும்.
பாஜக ஒருபோதும் கருத்து ரீதியாக எங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை எதிரிகளாக கருதியதில்லை.நான் கருத்து வேறுபாடு உள்ளவர்களை ஒரு போதும் தேச விரோதி என்று நினைத்தது இல்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.