கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 A ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் , லடாக் இரண்டும் யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு இரு அவையிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதாவிற்கு இரு அவையிலும் வாக்கெடுப்பு நடைபெற்று மாநிலங்களவையிலும் ,மக்களவையிலும் இரண்டிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வதந்திகள் பரவி வன்முறைகள் வரலாம் என எண்ணி ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் இணையதள சேவைகள் , தொலைத்தொடர்புகள் முடக்கப்பட்டது. மேலும் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் லேண்ட் லைன் வசதியும் , மொபைல் போஸ்ட் பெய்ட் வசதியும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று முதல் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் வசதியும் , அரசு மருத்துவமனைகளில் மட்டும் இணைய வசதியும் வழங்கப்படுகிறது.
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…