பஞ்சாபில் ஜூலை 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!
பஞ்சாப் மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 26 ஆம் தேதி பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பின்னர் கொரோனா தொற்று குறைய தொடங்கிய காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. தற்போது மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து, மாநிலத்தில் உள்ள பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.