50% மாணவர்களுடன் உத்தர பிரதேசத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு….!
இன்று முதல் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா காட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 50 சதவீதம் மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.