மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்து வரக்கூடிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒவ்வொன்றாக கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. இருப்பினும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கபிபடாமலேயே இருந்தது.
மேற்கு வங்கத்திலும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இதனை அடுத்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை, சனிடைசர் வழங்குதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேற்கு வங்க மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…