நாட்டிலேயே முதன் முறையாக பிளாஸ்மா வங்கி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ள பிளாஸ்மா தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அதனை கொண்டு மற்ற கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சையாகும்.
பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்ட பின்பு, மீண்டும் ரத்தமானது, குணமடைந்து பிளாஸ்மா தானம் செய்தவர்களின் உடம்பில் செலுத்தப்பட்டுவிடும்.
இந்த சிகிச்சை முறைக்காக நாட்டிலேயே முதன் முறையாக பிளாஸ்மா வங்கி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்மா வங்கி மூலம் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உருவெடுத்துள்ள மஹாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம், உலகிலேயே பிளாஸ்மா சிகிச்சை மூலம் அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மஹாராஷ்டிரா உருவெடுக்க உள்ளதாம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிளாஸ்மா சிகிச்சையானது மிகவும் உதவிகரமாக இருக்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…