முதல் தேசிய விண்வெளி தினம் : வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி !

PM Modi Wishes For National Space Day

டெல்லி : சந்திரியான்-3 வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது. அதனால், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாள் இந்திய விண்வெளி துறை மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. அதாவது, அமெரிக்க ரசியா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலாவில் தரையிறங்கிய 4-வது நாடாக இந்தியா இருந்து வருகிறது. இதில் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால் நிலவில் இதுவரை எந்த நாடும் நெருங்காத தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடக இந்தியா உள்ளது.

இதன் மூலம் உலக நாடுகளை இந்தியா திரும்பிப் பார்க்கச் செய்தது. இதனால், ஆகஸ்ட்-23 இந்தியா நாட்டுக்கே மறக்க முடியாத நாளாக அமைந்தது. இந்தச் சாதனையைக் கௌரவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதியை “தேசிய விண்வெளி தினமாக” அறிவித்தார். அதன்படி இன்று இந்தியா ‘முதல் தேசிய விண்வெளி’ தினத்தைக் கொண்டாடுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவின் முதலாவது தேசிய விண்வெளி தினத்தில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில், “முதல் தேசிய விண்வெளி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விண்வெளித் துறையில் நமது இந்தியாவின் சாதனைகளை மிகுந்த பெருமையுடன் இந்த நாளில் நினைவு கூர்கிறோம்.

நமது விண்வெளி விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் போற்றும் நாளாகவும் இந்த நாள் அமைந்துள்ளது. எங்கள் அரசாங்கம் இந்தத்துறை தொடர்பான தொடர்ச்சியான எதிர்கால முடிவுகளை எடுத்துள்ளது, மேலும், வரும் காலங்களில் நாங்கள் இன்னும் பலவற்றைச் செய்வோம்”, என்று பதிவிட்டுள்ளார்.

பல தோல்விகளைக் கண்டு மனம் தளராத இந்தியா மீண்டும் மீண்டும் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் பணியைத் தீவிரப்படுத்தியது. இந்த முயற்சியில் தான் சந்திரயான்-3 விண்கலத்தைக் கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது. அந்த முயற்சி தான் தற்போது இந்த ‘முதல் தேசிய விண்வெளி தினத்தை’ கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்