சந்திராயன் 2 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
ஜூலை 15 ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
Take a look at the first Moon image captured by #Chandrayaan2 #VikramLander taken at a height of about 2650 km from Lunar surface on August 21, 2019.
Mare Orientale basin and Apollo craters are identified in the picture.#ISRO pic.twitter.com/ZEoLnSlATQ
— ISRO (@isro) August 22, 2019
இந்த நிலையில் நிலவை சுற்றிவரும் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.2650 கி.மீ. தூரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்துள்ளது சந்திரயான்-2. இதனை இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.