அடுத்த 10 நாளில் முதல்கூட்டம்.,குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்கனும் – உச்சநீதிமன்றம் ஆணை!

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.
விளைபொருட்களான குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிற்கான மொத்த செலவும் மத்திய அரசே ஏற்க வேண்டும். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதத்திற்குள் இறுதி முடிவை எடுக்கவேண்டும் என விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள குழுவிற்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் இயல்புநிலைக்கு திரும்பவேண்டும். வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கை 8 வார காலத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜித்தேந்தர் சிங் மன், பிரமோத் குமார் ஜோஷியும், அசோக் குலாட்டி மற்றும் அனில் தன்வத் ஆகியோர் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், வேளாண் சட்டம் திரும்ப பெறுதல், குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்தல் என கோரிக்கைகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025