சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் தான் இந்த புதியவகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் பல நகரங்களில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் மட்டும் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் 0.2 சதவிகிதப் பாதிப்புடன் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் படித்து வந்துள்ளார். அங்கு வைரஸின் தொற்று காரணமாக அவர் அங்கிருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருடன் வந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உட்பட மற்ற இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் முதலில் வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 30-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவருக்கு 5 முறை மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் கடைசியாக எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மீண்டும் ஒருமுறை எடுக்கப்படும் சோதனையிலும் இதே முடிவு வந்தால் அந்த மாணவி பூரணமாகக் குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…