கொரோனாவில் இருந்து மீண்ட முதல் இந்திய மாணவி.! விரைவில் வீடு திரும்புவார்.? மருத்துவர்கள் அறிவிப்பு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- இந்தியாவின் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் இருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் வந்துள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் தான் இந்த புதியவகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் பல நகரங்களில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் மட்டும் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் 0.2 சதவிகிதப் பாதிப்புடன் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் படித்து வந்துள்ளார். அங்கு வைரஸின் தொற்று காரணமாக அவர் அங்கிருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவருடன் வந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உட்பட மற்ற இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் முதலில் வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 30-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவருக்கு 5 முறை மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் கடைசியாக எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மீண்டும் ஒருமுறை எடுக்கப்படும் சோதனையிலும் இதே முடிவு வந்தால் அந்த மாணவி பூரணமாகக் குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)