முதலில் நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன் – மத்திய பிரதேச முதல்வர்
முதலில் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கூறுகையில், முதலில் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநில மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், ‘நான் இப்போது தடுப்பூசி போட மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். முதலில் அது மற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதன்பின் நான் தடுப்பூசியை நான் போட்டுக் கொள்வேன். தடுப்பூசி இயக்கத்திற்கு பாதுகாப்பான முறையில் தயாரிக்கும் படி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர்-ரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கு கோவாக்சின் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கோவிஷீல்டு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்துள்ளது.