இன்று முதல் டெல்லி எல்லை திறப்பு..எதற்கெல்லாம் அனுமதி.!

Default Image

டில்லியின் அனைத்து எல்லைகளும் இன்று முதல் திறந்துவிடப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் உணவகங்கள்  திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் டெல்லி எல்லை பகுதி இன்று திறக்கப்படுகிறது .

இன்று முதல் மத்திய அரசு வணிக வாளகங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்களை நாளை முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கிஉள்ளது. இதையெடுத்து, டில்லியில் இன்று முதல் அனைத்து உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்றும் டில்லியின் அனைத்து எல்லைகளும் திறந்துவிடப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் விருந்து அரங்குகள் திறக்க அனுமதி இல்லை, ஜூன் மாத இறுதிக்குள் 15,000 படுக்கைகள் தேவை என்பதால், டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். மத்திய அரசின் கீழ் வரும் மருத்துவமனைகளில் வெளி மாநிலத்தவர்களுக்கும் அனுமதி உண்டு என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளர். மேலும், மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட 70% கொரோனா வரியை திரும்ப பெறப்படுகிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்