இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பால் முதல் உயிரிழப்பு..! – லால் அகர்வால்

Published by
லீனா

நாட்டின் 28 மாவட்டங்களில் நோய் பாதிப்பு 10% சதவீதத்துக்கு மேல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். 

முதலில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸானது, தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லால் அகர்வால், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டின் 28 மாவட்டங்களில் நோய் பாதிப்பு 10% சதவீதத்துக்கு மேல் இருப்பதாகவும், உலகம் முழுவதும் இந்த தொற்றுக்கு 108 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த 73 வயது முதியவர் ஓமைக்ரான் பாதிப்பால் உயிரிழந்ததாகவும், அவருக்கு இணை நோய்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

“யார்டா நீங்கெல்லாம்.?” இந்திய ராணுவத்திற்கு நன்கொடையா? பதறிய பாதுகாப்புத்துறை!

டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை  நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…

30 minutes ago

GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்? இன்று ராஜஸ்தான் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…

48 minutes ago

Live : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., பத்ம விருதுகள் வழங்கும் விழா வரை.!

சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…

1 hour ago

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.  டெல்லியில் உள்ள…

2 hours ago

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…

2 hours ago

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

3 hours ago