இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பால் முதல் உயிரிழப்பு..! – லால் அகர்வால்
நாட்டின் 28 மாவட்டங்களில் நோய் பாதிப்பு 10% சதவீதத்துக்கு மேல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முதலில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸானது, தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லால் அகர்வால், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாட்டின் 28 மாவட்டங்களில் நோய் பாதிப்பு 10% சதவீதத்துக்கு மேல் இருப்பதாகவும், உலகம் முழுவதும் இந்த தொற்றுக்கு 108 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த 73 வயது முதியவர் ஓமைக்ரான் பாதிப்பால் உயிரிழந்ததாகவும், அவருக்கு இணை நோய்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.