கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கம் – முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரில் கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டது. இந்த தரளவுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஜூலை 14-ஆம் இரவு 8 மணி முதல் ஜூலை 22 -ஆம் தேதி (நாளை)காலை 5 மணி வரை ஊரடங்கு மீண்டும் விதித்தது.
பெங்களூரில் பிறப்பிக்கப்ட ஊரடங்கு நாளை அதிகாலை 5 மணிக்கு முடிவடைய உள்ளது. இதனால், பெங்களூரில் உள்ளவர்கள் மத்தியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்தது.எனவே இன்று மாலை 5 மணிக்கு எடியூரப்பா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரோனாவை தடுக்க ஊரடங்கு கை கொடுக்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும். கொரோனா பரவலை தடுக்க மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.